மரம் மக்கள் அறக்கட்டளை சார்பாக குன்றி பழங்குடி கிராமத்தில் இலவச தையல் பயிற்சி வகுப்பு முடித்தவர்களுக்கு தையல் பயிற்சி சான்று வழங்குதல் மற்றும் உணவுத் திருவிழா நடைபெற்றது.கடந்த ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை தையல் பயிற்சி வகுப்புகள் 6 மாத கால வகுப்புகள் கற்றுக் கொண்டார்கள்.இந்த தையல் பயிற்சி வகுப்பில் எம்ராய்டரி ஜுவல் மேக்கிங் பிளவுஸ் சுடிதார் பட்டு பாவாடை என்று பல்வேறு வடிவங்களில் கற்றுக் கொடுக்கப்பட்டது.
இன்று 23.2.202 இவர்களுக்கு உண்டான தையல் கலை கற்றுக் கொண்டதற்கு உண்டான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது இந்த நிகழ்வில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்து உள்ள கடம்பூர் காவல் நிலையத்தில் இருந்து காவல் உதவி ஆய்வாளர் செந்தில் குமார் அவர்கள் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துக் கொடுத்தார். உடன் சமூக ஆர்வலர் நவ்சத், சதீஷ், wildlife போட்டோகிராபர் ஜோதி வேலுமணி, தையல் பயிற்சி ஆசிரியர் சவிதா, பாலாஜி மரம் மக்கள் அறக்கட்டளையின் செயலாளர் சித்ரா மற்றும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தாமரைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.